எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் நாளை (14) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் கடந்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நாளையும் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எனினும் அரசாங்கத்துக்கு நேரடியாக சவால் விடும் நோக்கத்துடன் கூட்டணியை உருவாக்க இந்த கலந்துரையாடல் பயன்படுத்தப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்குவது மட்டுமே இதன் நோக்கம் என்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply