புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையில், புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (13) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E(b) பிரிவின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply