கம்பஹாவில் 10 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மீவிட்டிகம்மன, மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையான 10 மணித்தியாலங்கள் ர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply