கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டிருந்தமையால் இறந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்த நபர் நீல நிற டி-சர்ட் மற்றும் நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
