தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மற்றும் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து மொனராகலை வெலியாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 22 பேர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
