நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நீராட சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (15) மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் தனது மாமியுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கியுள்ளார்.

நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply