அதிக பெறுதியான கேரள கஞ்சாவுடன் 2 நபர்கள் கைது!

அதிகளவான பெறுதியான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதானவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, வத்தளை பொலிஸ் பிரிவின் பங்களாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட 309 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களால் வாடகைக்கு பெறப்பட்டிருந்த வீட்டின் அறை ஒன்றிலேயே கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply