குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது, பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது.
குறித்த வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பிரியந்த வீரசூரியவினால் 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் கடந்த (13) ஆம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், வீடியோக்கள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
மேலும் பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
