மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த அதிகாரி தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்று, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபடகு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
