அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம்.
அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம்.
சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம்.
அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது.
அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை.
அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு.
மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
