மீன் பிடிக்க சென்ற நபர் குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு!

செவனகல பகுதியில் உள்ள ஹபுருகலை போதிராஜா குளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply