கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் உள்ள வீதி ஒன்றில் இருந்து சில துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொதியினுள் இருந்து மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
