வீதியில் கிடந்த பொதியில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை!

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் உள்ள வீதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் உள்ள வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது குறித்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் T-56 மகசின் போலியானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply