அமெரிக்க ஜனாதிபதிக்கும், உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளை மாளிகையில் நேற்றையதினம் (18) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில், இந்த சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவர் அதில் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.
போர் தொடர்பான சரியான தகவல்களை வழங்க இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர், பிரிட்டிஷ் பிரதமர், பிரெஞ்சு ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழு கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
