பேலியகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு- காயமடைந்தநபர் வைத்தியசாலையில்!

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவரை இலக்கு வைத்து, அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply