மன்னார் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17ஆவது நாளாக இன்றும் (19) தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு பனங்கட்டிக்கொட்டு, ஜிம் பிரவுன் நகர், எமில் நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் கிராமம் ஆகிய கிராம மக்களும், மீனவர்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கிவருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்கள் முழுமையாக கைவிடப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
