பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
