நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.
பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
‘ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு’ என்ற கோரிக்கையை முவைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு, அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்தன.

