நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழாவின் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில், யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி நாளைய தினம் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு, கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் உடனடியாக பணித்தார்.

தமது கோரிக்கையினை ஏற்று நாளைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக உளப்பூர்வமான நன்றிகளை பிரதமருக்கு தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply