முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022இல் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் தென்னக்கோனை சந்தேக நபராகப் பெயரிட, சட்டமா அதிபர் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தம்மை கைது செய்வதைத் தடுத்து, முன் பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் பிணை மனு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிணை மனு, நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply