வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் சூழ இன்று (21) இடம்பெற்று வருகின்றது.
காலை 6.15 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஆறுமுக பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர்.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று தேர்த் திருவிழா இடம்பெற்று வருகின்றது.
நாளை தீர்த்த திருவிழா இடம்பெற்று கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
அத்துடன் நல்லூரானின் 25 நாட்கள் சிறப்பு உற்சவம் இனிதே நிறைவு பெறுகின்றது.
