நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் இன்றையதினம் (21) போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியதால், மேல் மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையானது இன்று (21) காலை 8 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்களை கையொப்பமிட வேண்டாம் என கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கியிருந்தார்.
குறித்த பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் நேற்று (20) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக கம்பஹா பொது வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடிய போதிலும், அவர் அதற்குரிய பதில் வழங்கவில்லை என நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
அதன்படி இன்றைய தினம் மாகாண சபையின் கீழ் உள்ள சகல நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்களும் தமது கடமைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
