கைதான முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து இன்று நீதிமன்றுக்கு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் தம்மை கைது செய்வதைத் தடுத்து, முன் பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் பிணை மனு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் நேற்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிணை மனு, நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply