முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிடியாணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் இன்றையதினம் (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான டயானா கமகே ஆஜராகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply