சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று கூடுகின்றது!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (21) நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து சபாநாயகரின் நிலைப்பாடு அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.

எனினும் இந்த விடயம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய ஆளும் கட்சி, பிரதியமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (20) நாடாளுமன்றத்தில் கூடி இந்த விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply