வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து நாளையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி நாளை காலை 9 மணியளவில் நாடாளுமன்றச் சுற்று வட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூறக் கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

