குருநாகல் பகுதியில் தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply