குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்டவர் இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
