முன்னாள் ஜனாதிபதி ரணில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply