வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் சூழ இன்று நடைபெற்றது.
காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
அத்துடன் நல்லூரானின் 25 நாட்கள் சிறப்பு உற்சவம் இனிதே நிறைவு பெறுகின்றது.
நாளை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
