பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து எதிர்வரும் 25ஆம் திகதி குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில், நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் ‘பருத்தித்துறை நகரை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள போராட்டம், பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
