யாழ். செம்மணி அகழ்வு நடவடிக்கை விவகாரம்- ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை!

யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி எதிர்வரும் 25ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன் குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த அகழ்வாய்வின் போது 147 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், 133 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply