ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் அதற்கான பரிந்துரையை வழங்கியிருந்தனர்.

சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply