பயாகல கடற்பகுதிக்கு நீராட சென்ற 02 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்பான மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, பயாகல கடற்பகுதிக்கு நீராட சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
