வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டை நடாத்திய 3 சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
