முன்னாள் ஜனாதிபதி கைது விவகாரம்- வௌிநாட்டு தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று (25) இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று, உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரல, அலி சப்ரி உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ஏனைய தூதரகங்களுக்கும் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply