மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உணவக உரிமையாளரை குறி வைத்து, காரில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தில இருந்து கைத்துப்பாக்கி ஒன்று, நான்கு தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தொடர்பிலோ, துப்பாக்கிச் சூடு நடாத்திய சந்தேகநபர் தொடர்பிலோ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
