யாழில் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம்!

யாழ். நாவாட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலக பணிகள் 70 மில்லியன் ரூபாய் செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் 01ஆம் திகதியின் பின்னர் வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் புதிய அலுவலகத்தினுடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply