ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு- சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் ‘சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ​​ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் zoom தொழினுட்பத்தினூடாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னிலையானார்.

சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply