இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புத்தளம் முதல் மாத்தறை வரையான கரையோர கடல் பகுதிகளில், குறிப்பாக கொழும்பு மற்றும் காலி வழியாக சில இடங்களில் மழை பெய்யும்.

சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகள் (மன்னார் வழியாக) மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகள் (ஹம்பாந்தோட்டை வழியாக) அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படும்.

காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடல் பகுதிகள் (முல்லைத்தீவு வழியாக) அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.

சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகளில் (மன்னார் வழியாக) மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் (ஹம்பாந்தோட்டை வழியாக) காற்றின் வேகம் மணிக்கு (50-55) கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடல் பகுதிகளில் (முல்லைத்தீவு வழியாக) காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply