மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தாக்கப்பட்டு கொலை- கடற்படை அதிகாரியின் கொடூர செயல்!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக 119 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது,

கடத்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளையில், மற்றொரு நபர் வீதியை மறித்து நிறுத்தி அவரை தாக்கி கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 26 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருடன் நீண்டகாலமாக நிலவிய தகராறு அதிகரித்ததன் விளைவால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மகுலுகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply