குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்பட்ட விபத்தில் வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இரண்டு மாணவர்களும் உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

