யாழ். செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றையதினம் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.
அதன்படி செம்மணியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.
செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 34வது நாளான நேற்றைய தினம் ( 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உடல்கள் நேற்றைய அகழ்வின் போதே அடையாளம் காணப்பட்டுள்ளது.
தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரணிதா தெரிவித்தார்.
செம்மணியில் அகழ்வில் இதுவரையில் 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
