வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இன்றையதினம் (27) கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் முன்னெடுத்து வந்த நிலையில், 3111 ஆவது நாளான இன்று ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊர்வலமானது வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமாகி, மணி கூட்டுச் சந்தி வழியாக ஏ9 வீதியை அடைந்து அவர்களுடைய போராட்ட பந்தலை வந்தடைந்திருந்தனர்.
அங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது போராட்டத்தினை நிறைவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
