வீதி தடை தொடர்பாக யாழ். மாநகர சபை விடுத்துள்ள அறிவித்தல்!

வீதி தடை தொடர்பாக யாழ். மாநகர சபையால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

2025.08.28ஆம் திகதி முதல் 2025.11.19ஆம் திகதி வரை யாழ். மாநகர சபையினால் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் வீதித் தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

அதன்படி,

இடுகாடு வீதி புனரமைப்பு (யாழ் பிரதம தபாலக சந்தியிலிருந்து தொலைத் தொடர்பு நிலைய சந்தி வரை)

மூத்த விநாயகர் வீதி திருத்தமும், முடிவுப் பகுதியில் உள்ள பாலம் திருத்தம் (மூத்த விநாயகர் கோவில் வீதி, ஆசிர்வாதப்பர் வீதி இணையும் சந்தி)

முருகமூர்த்தி பெரிய தம்பிரான் இணைப்பு பாலம் கட்டுமாணம் (முருகமூர்த்தி வீதி பெரியதம்பிரான் வீதி சந்தி)

ஆகிய வீதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அவ் வீதிகளை பயன்படுத்துவோர் போக்குவரத்தினை சிரமம் இன்றி மேற்கொள்ள மாற்று பாதையினை பயன்படுத்துமாறு யாழ் மாநகரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply