முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். அவை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் அல்ல.
இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது அவதானித்து வருகின்றது.
இலங்கையில் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று கடந்த காலங்களில் கூறப்பட்டாலும், இன்று அத்தகைய நிலைமை காணப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
