மன்னாரில் தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 25ஆவது நாளாக கனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த போராட்டத்துக்கு, நானாட்டான் பிரதேச மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply