‘கெஹெல்பத்தர பத்மே’ உட்பட நாட்டின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த நபர்கள் கைது!

நாட்டின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவில் கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் பெக்கோ சமன்” என்பவரின் மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கைது நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply