முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கின் போது கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு கடந்த 26ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் ஒருவர் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கியிருந்தார்.
இதனால் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி சந்தேகநபர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் நகர சபை உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
