ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நாங்கள் இப்போது திட்டமிட்டுள்ளோம்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.
முழு வீச்சில் நடைபெறும் இந்த அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத் தரவே- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
